2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

13 ஆவது திருத்தத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கலை கோருமாறு அறிவுறுத்திய இந்தியா

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ. ஜயசேகர)

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கத்தை கோருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேற்படி அறிவுறுத்தலை வழங்கியதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா டெய்லி மிரரிடம் தெரிவித்தார்.

எனினும் பொலிஸ் அதிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்தாகவும் மாவை சேனாதிராஜா கூறினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்காக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆவணமொன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக அமையுமென தமிழ் மக்கள் நம்பவில்லை எனவும் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் மாவை சோனதிராஜா எம்.பி. கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .