2021 ஜூலை 31, சனிக்கிழமை

நாளை முதல் 15 ஆம் திகதிவரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும்

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

ஏப்ரல் 5 முதல் 15 ஆம் திகதிவரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதால் உஷ்ணமான  காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி இது தொடர்பாக டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில்,  சூரியன் வடக்கு நோக்கிய நகர்வில் ஏப்ரல் 5 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக தோன்றும். பின்னர் தெற்கு நோக்கிய நகர்வினால் செப்டெம்பர் மாதம் மீண்டும் இலங்கைக்கு மேலாக சூரியன் தோன்றும் எனத் தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 12.14 மணியளவில் திக்வெல்லை, காகந்துர, வெலிகம, வெதிகம பிரதேசங்களில் சூரியனின் மிகுந்த வெப்பத்தை உணர முடியும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையெங்கும் தெளிவான உஷ்ணமான காலநிலை நிலவும் எனவும் உஷ்ணமான காலநிலை காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .