2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு; நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஜயசேகர)

18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ஒன்றிணைந்த இடது முன்னணி நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமையை நாம் எதிர்ப்போம். இந்த முறைமைக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும், பிரசாரம் தொடர்ந்து செய்வோம் என ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கூறியுவுள்ளது.

நடாளுமன்றத்தில் 18 ஆவது திருத்தம் நிறைவேறுவதற்கு ஒன்றிணைந்த இடது முன்னணி  ஆதரவளித்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியில் உதவிய பொது செயலாளர், எஸ்.சுதசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியும்; லங்கா சமசமாஜ கட்சியும் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறைமையயை எதிர்ப்பதைக் கொள்கையாக கொண்டுள்ளன என கூறினார்.

“ஆம், நாம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரானவர்கள். ஆனால் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பதை தவிர வேறு தெரிவு எமக்கு இருக்கவில்லை.

ஏனெனில் நவ  தாராண்மை வாதிகள், முதலாளித்துவ வாதிகள், அதிதீவிர இடதுசாரிகள் ஆகியோர் அரசாங்கத்தை தோற்கடித்து அரசாங்கத்தையும் நாட்டையும் தோற்கடிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தனர்.

இந்த வகையிலான நிலைமையை கருத்திற்கொண்டே எமது இரண்டு அமைச்சர்களையும் ஒரு பிரதியமைச்சரையும் இரண்டு நாடாளுமன்ற உருப்பினரையும் 18 ஆவது திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிக்க இணைந்த இடது முன்னணி  அனுமதித்தது.” என சுதசிங்க கூறினார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியட் குழு, அமைச்சர் திஸ்ஸவிதாரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை மறுத்த சுத்தசிங்க 18 ஆவது திருத்ததிற்கான ஆதரவு வழங்கும் தீர்மானத்தை இணைந்த இடது முன்னணி கூட்டாக எடுத்தபடியால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்படவே இல்லையென கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .