2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு 2வருட சிறைத்தண்டனை

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாருக் தாஜீதீன்)

2000 ஆம்ஆண்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கடமை செய்யவிடாது தடுத்தமைக்காக முன்னாள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்ட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் 25,000  ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஹெட்டியாராச்சி சமத்திரஜீவாவுக்கு 300,000 ரூபா செலுத்த வேண்டுமெனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க தீர்ப்பளித்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக ருநத் காலத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாரட்ன, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவராக கடமையாற்றினார் .

2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை கைதுசெய்ய உதவி பொலிஸ் பரிசோதகரான ஹெட்டியாராச்சி சமுத்திரஜீவ முயன்றபோது அவரை கடமை செய்யவிடாது பிரதிவாதி தடுத்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டு இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 


  Comments - 0

 • munas Saturday, 26 March 2011 05:37 PM

  செய்தியின் தலைப்பை சரியாக எழுதுங்க பாஸ். நீங்கள் எழுதிய தலைப்பின் படி நிஹால் கரு நேரடியாக ஜெயிலுக்கு போவதுபோல் தொனிக்கிறது. ஆனால் அவருக்கு கொடுக்கபட்டிருப்பது ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மாத்திரமே ! அதாவது அடுத்த ௧௦ வருசத்தினுள் இதேபோல குற்றம் ஒன்றை செய்யும் பட்சத்தில் 2 varusaththukku ஜெயிலில் கம்பி எண்ணவேண்டி வரும்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 29 March 2011 09:20 PM

  ஒத்திக்க ஒத்திக்கப்பா! ஒத்தி வைப்பதெல்லாம் ஒரு இதுக்குத்தான்பா! எய்தவர் (எய்தவள்?) இருக்க அம்பை ஏன் நோவான்? இந்த ஒத்திவைக்கும் முறை வீடு கூலி விடயத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் கூலியும் இல்லை ஆனால் கொடுத்தபணம் காலிபண்ணி கொடுக்கும் போது வட்டி இல்லாமல் கிடைக்கும். மிலியன் வீடுகள் எல்லாம் வெறும் புருடா யானைகள் நகரங்களுக்குள் புக வழி வகுக்கும். வீட்டை காலி பண்ணி கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்திலேயே வீடுகளை கூலிக்கு கொடுக்காதவர்கள் அநேகம். ஒத்தியாம் ஒத்தி தண்டனை நிச்சயமில்லை, விடுதலை உண்டு .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .