2021 ஜூன் 16, புதன்கிழமை

20 ஆண்டுகளின் பின்னர் கொள்கலன் சேவை ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 ஆண்டுகளின் பின்னர் ரயில்  கொள்கலன்கள் சேவை கடந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைக் கூறினார்.

வடபகுதியிலுள்ள படையினருக்கான விநியோகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.  தற்போது  இரண்டு ரயில் கொள்கலன்கள்  சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த வாரமளவில் ரயில் கொள்கலன்கள் சேவை  3ஆக அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

300 ரயில் கொள்கலன்கள் ரயில் மூலம் கடந்த சில நாட்களில்  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து,  தாண்டிக்குளம் ரயில் நிலையத்தைச் சென்றடைந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .