2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பேலியகொடையில் 20பேர் கைது

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு, பேலியகொடை, மீன் சந்தையிலுள்ள விற்பனையாளர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுவந்த சந்தேகநபர்கள் 20 பேர் இன்று காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கா தெரிவித்தார்.

குறித்த சந்தையில் மீன் விற்பனையானர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பணம் பெறும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீள்வளத்துறை அமைச்சினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று காலை குறித்த மீன் சந்தையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் காயமடைந்த மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By:- Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .