2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கை அகதிகளுக்கு பிரஜா உரிமை வழங்க ஜெயலலிதா எதிர்ப்பு

Super User   / 2009 ஒக்டோபர் 07 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியப்பிரஜா உரிமை வழங்குவதற்கு தமிழக எதிர்க்கட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

ஆளும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசாங்கம் கடந்தவாரம் இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

மேற்படிக்கோரிக்கையின் மூலம் கருணாநிதி இலங்கைத்தமிழ் மக்களின் போராட்டத்தை வேறு திசைக்குக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றார் என அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .