2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாவிரதம்

Super User   / 2009 ஒக்டோபர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரி படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட  இலங்கை அகதிகள் தம்மை விடுவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல்,தம்மை நியூஸிலாந்து,அவுஸ்திரேலியா அல்லது கனடா ஆகிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி வைக்குமாறு தடுப்புக்காவலில் உள்ள இலங்கை அகதிகள் சார்பில் பேசிய அலெக்ஸ் என்று தன்னை பெயர் குறிப்பிட்டுக்கொண்ட ஒருவர்  தெரிவித்தார்.

தமது படகுகளில் உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ள இவர்கள்,தமது உயிரை போக்கிக்கொள்ளப்போவதாகவும் அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பெண்கள்,சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .