2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திஸாநாயகத்துடன் கைதான ஜஸீகரன்,மனைவி ஆகியோர் மேல் நீதிமன்றத்தால் விடுதலை

Super User   / 2009 ஒக்டோபர் 27 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை அச்சக உரிமையாளர் எஸ்.ஜஸீகரன் வாபஸ் வாங்கிக்கொண்டதையடுத்து,சட்டமா அதிபர் திணைக்களம் ஜஸீகரன்,அவரது மனைவி ஆகியோர் மீதான வழக்குகளையும் மீளப்பெற்றுக்கொண்டதால்,இவர்கள் இருவரும் கொழும்பு மேல் நீதி மன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்த குற்றாச்சாட்டின் பேரில் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸாநாயகத்துடன் இவர்கள் இருவரும் புலனாய்வுப்பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

திஸாநாயகத்துக்கு எதிராக 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.     

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .