2021 ஜூன் 16, புதன்கிழமை

அமெரிக்காவில் கோத்தபாய மீது அதிகாரிகள் விசாரணை

Super User   / 2009 நவம்பர் 02 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் விமான நிலையத்தில் கேள்விகளுக்குட்படுத்தப்பட்டார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை தூதுக்குழுவின் சார்பில் அமெரிக்கா சென்றபோது சுமார் ஒரு மணி நேரம் பாதுகாப்புச்செயலாளர் கேள்விக்குட்படுத்தப்பட்டதாக  விமல் வீரவங்ஸ இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் மேலும் கூறினார்.

கோத்தபாயவிடம் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை.ஜெனரல் பொன்சேக்காவை அவர்கள் பயன்படுத்த பார்க்கின்றார்கள் என்றும் வீரவங்ஸ குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .