2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

எவருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை:- சந்திரசேகரன்

Super User   / 2009 டிசெம்பர் 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரை எதிர்வரும் வாரமளவில் சந்திக்கவிருப்பதாகவும், இதன் பின்னரே எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தினர் உட்பட சிறுபான்மையினத்தவருக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சியில் எந்த வேட்பாளர் ஈடுபடுகின்றாரோ அவருக்கு தமது கட்சி முழுமையான ஆதரவினை வழங்குமெனவும்  டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு மலையக மகக்ள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .