2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்

Super User   / 2009 டிசெம்பர் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜக்கிய நாடுகளின் சிறுவர்கள் மற்றும்  ஆயுத முரண்பாடுகளுக்கான விசேட பிரதிநிதி மேயர் ஜெனரல் பற்றிக் கம்மறட் இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று இலங்கை வரவிருக்கும் ஜக்கிய நாடுகளின் சிறுவர்கள் மற்றும்  ஆயுத முரண்பாடுகளுக்கான விசேட பிரதிநிதி மேயர் ஜெனரல் பற்றிக் கம்மறட்,  எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரெனவும் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்றிருந்த மோதல்களின்போது பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிலை மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயவிருப்பதாகவும் அறியவருகிறது. அத்துடன், ஜக்கிய நாடுகளின் சிறுவர்கள் மற்றும்  ஆயுத முரண்பாடுகளுக்கான விசேட பிரதிநிதி அரசாங்க அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரநிதிகள் மற்றும் சிறுவர்களையும் சந்திக்கவுள்ளார். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .