2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கை வரவுள்ளது

Super User   / 2009 டிசெம்பர் 06 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும்  ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென 4 வெளிநாட்டுக் குழுவினர் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளனரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருப்பதாக ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் இதனைக் கூறினார்.

ஜக்கிய நாடுகள், ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல்க் கண்காணிப்பு பிரதிநிதிகள் ஆகியோரே வரவழைக்கப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறியதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .