2021 ஜூன் 16, புதன்கிழமை

எஸ் பி திஸாநாயக்கா ஆளும் கட்சியில் இணைந்தார்

Super User   / 2009 டிசெம்பர் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்காஆளும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில்  இணைவதற்குத் தான்  தீர்மானித்திருப்பதாக இன்று காலை அறிவித்தார்.  

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்ஷ்வுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் வெற்றியடைவாரென தான் நம்புவதாக கூறிய எஸ்.பி.திஸ்ஸநாயக்க, இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்தையும் மகிந்த ராஜபக்ஷ்வே நிலைநாட்டுவாரெனவும் குறிப்பிட்டார்
       
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக  இருந்த  எஸ்.பி.திஸாநாயக்கா, பின்னர் ஐ.தே.கட்சியில் இணைந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .