2021 ஜூன் 17, வியாழக்கிழமை

முதலில் தீர்வினை வெளிப்படுத்தும் பிரதான வேட்பாளர்களருக்கு ஆதரவு:சுரேஷ் பிரேமச்சந்திரன்

Super User   / 2009 டிசெம்பர் 07 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களான இருவரில் யார் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றனரோ அவருக்கே தாம் ஆதரவளிக்கவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டெய்லிமிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோர் இனப்பிரச்சினக்கான தீர்வு தொடர்பில் தமது கொள்கைகளை வெளிப்படுத்தவேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

மோதல்கள் முடிவடைந்திருக்கின்றபோதிலும், அரசியல்த் தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பிரதான வேட்பாளர்கள் இருவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முதலில் தமது கொள்கைகளை வெளிப்படுத்தவேண்டும் எனவும், அதன் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .