2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் சிவாஜிலிங்கம்?

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில்  தமது கட்சி தீர்மானித்தால், தான் போட்டியிடத் தயாராகவிருப்பதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். 

பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் தமிழ் மக்கள் ஆதரவளிக்கமாட்டார்களெனவும் நேற்று அவர் கூறினார். இந்த நிலையில், சிங்கள மக்களுக்கு இந்த நாட்டின் தலைவரை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவர் தேவையென தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், இதனை தமது கட்சி தீர்மானிக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .