2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விடுதலை புலிகள் சரணடைவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை:ஜோன் கோம்ஸ்

Super User   / 2009 டிசெம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகளின்  மேற்பார்வையின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சரணடைவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் சரணடைவதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதி இராஜங்கச் செயலாளர் ஜோன் கோம்ஸ் தெரிவித்தார்.

சி.என்.என் தொலைக்காட்சிசேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததென ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியிருந்தாகவும், பின்னர் ஐக்கிய நாடுகளின் உரிய அதிகாரிகளுக்கு அந்தத் தொடர்பு மாற்றப்பட்டிருந்தது.

எனினும், இறுதிக்கட்ட யுத்தம் விரைவாக முடிவடைந்தமையால் ஐக்கிய நாடுகள் தலையிடுவதற்கான போதியளவு அவகாசம் கிடைக்கவில்லையெனவும் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .