2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க உத்தரவாதம்:பிரி கோரிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 16 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான உத்தரவாதத்தினை  வழங்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் பிரித்தானிய  நாடாளுமன்றத்தில் நேற்று அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதியளித்தமையை வரவேற்றுள்ள டேவிட் மில்லிபான்ட், எனினும், மனிதநேய முகவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான அனைத்து உதவிகளையும்  வழங்கவேண்டுமெனவும் கூறினார்.

இதேவேளை, அரசியல்த் தீர்வு தொடர்பில் தனது அரசாங்கம்  இலங்கையுடன்  இணைந்து செயற்படுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சார் டேவிட் மில்லிபான்ட் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .