2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கொலை குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பெண் சிங்கபூரில் கைது

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் இந்திய வாலிபரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில்  இலங்கைப் பெண்ணொருவர் குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாலிபர் ககி புக்கிற் எனும் அடுக்குமாடியின் அவரது படுக்கையறையிலிருந்து தலையில் காயமேற்பட்டிருந்த நிலையில்  இந்த மாதம் 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 32 வயதுடைய முருகையன் செல்வம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ககி புக்கிற் எனும் அடுக்குமாடியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிவந்த 31 வயதுடைய தர்மலிங்கம் புவனேஸ்வரிக்கு மேற்படி வாலிபரின் கொலை தொடர்பில் சம்பந்தமிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த புதன்கிழமை சிங்கப்பூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாலிபரின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பெண் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுளார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .