2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க செனட்டர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2009 டிசெம்பர் 22 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க செனட்டரான ஜோன்.எப்.கெரியின் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு உறவுகளுக்கான செயற்குழு அண்மையில் வெளியிட்டிருந்த
அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையில் சினேகபூர்வமான உறவை
மேம்படுத்துவதற்கு முன்வருமாறு  இந்த மாத முற்பகுதியில் வெளிநாட்டு
உறவுகளுக்கான செயற்குழு இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே,  ஜோன்.எப்.கெரியின் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போர்க்குற்றங்கள்
தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் ஆர்ப்பட்டத்தில்
ஈடுபட்டிருந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .