2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் தமிழ் மக்களுக்கான பொலிஸ் பதிவில் தளர்வு

Super User   / 2009 டிசெம்பர் 23 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் குறுகிய காலம்வரை தங்கியிருக்கும் தமிழ் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ளத் தேவையில்லையென பொலிஸார் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பொலிஸ் பதிவு தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த  பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க,  இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், வெளிநாடு மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து வரும் தமிழ்
மக்கள் கொழும்பில் ஒரு மாதகாலம் வரை பொலிஸ் பதிவின்றி தங்கியிருக்கமுடியுமெனவும் நிமல் மெதிவக்க குறிப்பிட்டார். 

எனினும், ஒரு மாதகாலத்திற்கு மேல்   கொழும்பில் தங்கியிருக்கும் தமிழ்
மக்கள் அவசியம் பொலிஸ் பதிவை மேற்கொள்ளவேண்டுமெனவும்  நிமல்
மெதிவக்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .