2021 ஜூன் 17, வியாழக்கிழமை

உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்ப இந்தோனேசியா தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 27 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியக் கடற்பரப்பில் உயிரிழந்தவரின் சடலத்தை  விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச்செல்லவிருப்பதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்ததாகவும்  இந்தோனேசிய
வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

29 வயதான யாகொப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையிலிருந்து, அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் சென்ற 250
பேருடனான படகொன்று கடந்த 11 வாரங்களாக இந்தோனேசியக் கடற்பரப்பில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .