2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சிவாஜிலிங்கம் நாடுகடத்தப்பட்டதாக இந்திய ஊடகம் தகவல்

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னைக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம்  நாடுகடத்தப்பட்டிருப்பதாக 'த டைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய  மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே
எம்.கே.சிவாஜிலிங்கம் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் 'த டைம்ஸ் ஒவ் இந்தியா '
தெரிவித்தது.

இந்த நிலையில், சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்படவில்லையென  
வலியுறுத்தியிருக்கும் இந்திய குடிவரவுத்துறை அலுவலகம், எனினும்,  அவருக்கு
சாதரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது.

பிரிட்டனிலிருந்து டுபாய் ஊடாக சென்னைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த
எம்.கே.சிவாஜிலிங்கத்தை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் விமான
நிலையத்திலிருந்தே  நாடுகடத்தியுள்ளனர்.

இதேவேளை, எம்.கே.சிவாஜிலிங்கம் நாட்டிற்குள் நுழைய
அனுமதிக்கப்படவில்லையென்பதுடன், அவர் டுபாய்க்கே
திருப்பியனுப்பப்பட்டதாகவும் இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .