2021 ஜூன் 16, புதன்கிழமை

நிலநடுக்கம்:நானுஓயாவரை கொழும்பு, பதுளை புகையிரத சேவை

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புக்கும்,  பதுளைக்கும் இடையிலான புகையிரத சேவை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டுச் சபையின் கட்டுப்பாட்டாளர் நிகால் பெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.
 
நிலநடுக்கம் காரணமாக ஒகியா புகையிரத நிலையத்திற்கு அண்மையிலான தண்டவாளங்களில் தடைகள் ஏற்பட்டிருப்பதுடன், இதனாலேயே,  நானுஓயாவூடாக புகையிரத சேவை நடைபெறுவதாகவும் அவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இந்த நிலையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள்
இடம்பெற்றுவருவதுடன், இன்னும் சில மணித்தியாலங்களில் கொழும்புக்கும்,
பதுளைக்கும் இடையிலான புகையிரத சேவை வழமைக்குத் திரும்புமெனவும்
நிகால் பெர்னான்டஸ் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .