2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கிழக்கில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பிரதேசத்தில் இதுவரை காலமும் காணப்பட்ட மீன்பிடிப்பதற்கான தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நேற்று மீனவப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம இந்த அறிவித்தலை விடுத்தார்.

உயர் பாதுகாப்பு வலயமான திருகோணமலைத் துறைமுகம் தவிர்ந்த ஏனைய கடற் பகுதிகளில் மீனவர்கள் எந்த நேரத்திலும் மீன்பிடிப்பில் ஈடுபடமுடியுமெனவும் அவர் கூறினார்.

எனினும், சந்தேகத்திற்கிடமான மீன்பிடி வள்ளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் மொஹான் விஜேவிக்கிரம குறிப்பிட்டார்.

இதேவேளை, அங்கு கருத்துத் தெரிவித்த உயர் அதிகாரி சிசிறி ஜயக்கொடி, மீனவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டைகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பது சிறந்ததெனவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .