2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட 3 இலங்கையர் பிரிட்டனில் கைது

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள்  அந்த நாட்டுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டஸ்ரன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே ஆயுதங்களுடன் இந்த 3 இலங்கையர்களும் கொள்ளையில் ஈடுபட்டதாக பிரிட்டன்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தின் முகாமையாளரை துப்பாக்கிமுனையில் மிரட்டி  பணம் பெற முயற்சித்ததுடன், இது பலனளிக்காத நிலையில் இவர்கள் தப்பிச்சென்றதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், தப்பிச்சென்ற இந்த 3 பேரையும்    பிரிட்டன் பொலிஸார் கைதுசெய்திருப்பதுடன்,  மேலதிக விசாரணைக்காக இவர்களை தடுத்துவைத்திருப்பதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .