2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஐ.தே.க சுடுவல்ல தொகுதி அமைப்பாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின்  சுடுவல்ல தேர்தல்த் தொகுதி அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸ பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மருதானையில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் நிமல் மெதிவக்க  தெரிவித்துள்ளார்.

சுடுவல்ல பகுதியில் கீத்சிறி ராஜபக்ஸ குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாக விசேட அதிரடிப் படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, இனந்தெரியாத குழுவினர் கீத்சிறி ராஜபக்ஸவின் முகத்தை மூடி  வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .