2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இறுதி அஞ்சலிக்காக நாடாளுமன்றத்தில் பெ.சந்திரசேகரனின் பூதவுடல்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணித் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக  நேற்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெ.சந்திரசேகரனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், சபாநாயகர், உத்தியோகஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, அமைச்சர் பெ.சந்திரசேகரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பெ.சந்திரசேகரனின் மறைவு தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, நாட்டுக்கும் பாரிய இழப்பாகுமெனவும் தெரிவித்தார். 

பெ.சந்திரசேகரனின் பூதவுடல் தலவாக்கொல்லையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .