2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இரகசிய பேச்சுவார்த்தைக்கு வருமாறு த.ம.வி.புக்கு ஐ.தே.க அழைப்பு

Super User   / 2010 ஜனவரி 04 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரகசியப் பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும் வகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைக்கு  வருமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளன.

இதேவேளை,  சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  தீர்மானித்திருப்பதாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜா, ஊடகவியலாளர்களுக்கு  குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இதனை மறுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .