2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அரசின் அச்சுறுத்தலால் ஆதரவளிக்க பிள்ளையானின் கட்சி பின்வாங்கல்-திஸ்ஸ அத்தநாயக்க

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க மாகாணசபையின் பிரதித் தலைவர் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பியபோதிலும், அரசாங்கத்திலிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் தயக்கம் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அச்சுறுத்தல் விடுப்பதால் சரத் பொன்சேகாவுக்கு அவர்களால் வெளிப்படையாக ஆதரவளிக்கமுடியாதிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் அச்சமடைவதாகக் கூறிய திஸ்ஸ அத்தநாயக்க, தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பவர்களின் பெயர்களை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .