2021 ஜூன் 16, புதன்கிழமை

பிரபாகரனின் தந்தை பூதவுடல்; சிவாஜிலிங்கம் பொறுப்பேற்றார்

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பிரபாகரனின் தாயாரும் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பிரபாகரனின் பெற்றோர் இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை  சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி காலமானமை குறிப்பிடத்தக்கது.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .