2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கைக்கான ஜி.எஸ்.பி மீளப்பெற பிரி.ஆதரவு ;பிரி.அமைச்சர்

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளப்பெறப்படுவதை பிரிட்டன் ஆதரிக்கிறதென அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரெத் தோமஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்ற சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் முதலாவது நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் யுத்த சூழ்நிலை இல்லாத நிலையில், அங்கு சுமுகமான சூழ்நிலை நிலவுவதே இதற்கான காரணமெனவும் கரெத் தோமஸ் சுட்டிக்காட்டினார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இராஜதந்திர வழிகளூடாக இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் அரசாங்கம் தனது கவலையை தெரிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்..

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவாகவிருப்பினும், அவை சுயாதீனமாக விசாரணை செய்யப்படவேண்டுமென்பதில் தாம் தெளிவாகவிருப்பதாகவும் பிரிட்டன் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரெத் தோமஸ் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .