2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பிரபாகரன் தந்தையின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட தொழிற்சங்க பிரதிநிதி கைது

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரத்னவின் பிரதிநிதியொருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தையின் மரணச் சடங்கில் விக்கிரமபாகு கருணாரத்னவின் பிரதிநிதி கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையிலேயே, குறித்த பிரதிநிதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இடதுசாரி முன்னணியின் முக்கிய உறுப்பினரான  தர்மசிறி லங்காபீலி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின்  அழைப்பின் பேரில் விக்கிரமபாகு கருணாரத்னவை பிரதிநிதித்துவப்படுத்தி தர்மசிறி லங்காபீலி பிரபாகரனின் தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச்சென்றதாக  ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இந்த நிலையில்,  தர்மசிறி லங்காபீலி இனக் குரோதத்தை தூண்டும் வகையில் பிரபாகரனின் தந்தையின் மரணச்சடங்கில் உரையாற்றியதாக பொலிஸார் குற்றஞ்சாட்டி கைதுசெய்ததாக ஊடகப் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .