2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சு.க பிரமுகர் கைது

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாணத்திற்கான அரசியல்ப் பிரமுகர் ஒருவர் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின்  பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல்ப் பிரமுகர் கைதுசெய்யப்பட்டமையை  உறுதிப்படுத்தியிருக்கும் பொலிஸார், அவரது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் இளம் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில்  கடத்தியிருந்ததாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .