2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வாரியப்பொலவில் பொன்சேகாவின் ஆதரவாளர் அடித்து கொலை

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், வாரியப்பொலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஆதரவாளர் ஒருவர் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

வாரியப்பொலப் பகுதியில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 10 பேர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, 7 மோட்டார்சைக்கில்களில் வந்த
இனந்தெரியாத குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

அமகடவர சிங்கள வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரின் புதல்வரான
33 வயதுடைய தம்மிக்க ஹேரத் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், கொல்லப்பட்டவரின் சடலம் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .