2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தேர்தலுக்கு நிதி வழங்க தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இலங்கை வந்தார்;ஜே.வி.பி குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின் சினவத்ரா தேர்தலுக்காக அரசாங்கத்திற்கு நிதியுதவியளிக்க வருகை தந்திருந்ததாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த தக்ஸின்  சினவத்ரா டிசம்பர் மாதம் 13ஆம் திகதி புறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவை பாதிப்படையச் செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் சோமவன்ச அமரசிங்க குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசத் தொடர்பாளரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுடன் தக்ஸின் சினவத்ரா தொடர்பு வைத்திருந்தார் எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .