2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கரு ஜயசூரியவின் மனைவி வீட்டில் பொலிஸார் சோதனை

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் மனைவியின் பூர்வீக வீடு பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சோதனையிடப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், அவதூறு பிரசுரங்களை கொண்ட கட்டுரைகள் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வீட்டில் பொலிஸார் எதனையும் மீட்கவில்லை என கரு ஜயசூரிய டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

ரன்முத்துவல கடவத்த பகுதியில் அமைந்திருக்கும் குறித்த வீட்டில் தனது மனைவியின் தம்பி வசித்து வருவதாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.  
எனினும், குறித்த வீடு  தற்காலிகமாக ஜனதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகமாக   பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கை தனக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருப்பதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .