2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் வீட்டில் சிஐடியினர் சோதனை

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சிரேஷ்ட ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்வதற்காக அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை சென்றுள்ளனர். எனினும், குறித்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லையெனவும்
தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்   சட்டவிரோத ஆயுதங்களை வீட்டில் மறைத்துவைத்திருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் 20 குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்ததாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக ஆனல்ட் ஹரிபிரிய டி சில்வா தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மறுபடியும் அவரது வீட்டிற்கு சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .