2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விஜய அச்சகம்-ரணில் அலுவலகம்:சிஐடி சோதனைக்கு நீதிமன்றம் தடை

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகையை வெளியிடும்  விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்துக்குச்சொந்தமான பியகம அச்சகம், எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் ஆகியவற்றை சோதனையிடுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதனை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பியகமவில் அமைந்துள்ள அச்சகத்தில் அவதூறு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அச்சிடுவதாக பொலீஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.அத்துடன்,ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.

குற்றஞ்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான தகுந்த சாட்சியங்கள் எதுவும்
முன்வைக்கப்படாததை காரணம் காட்டி மஜிஸ்டிரேட் நீதிமன்றம் அனுமதி
வழங்க மறுத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .