2021 ஜூன் 16, புதன்கிழமை

இடம்பெயர்ந்த மக்கள் விசேட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதி

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள்  தமக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையிலேயே, விசேட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளருக்கான ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று காலை 10.30  மணியளவில் தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்ததாக பந்துல குலதுங்க குறிப்பிட்டார்.

மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருக்கும் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்களிடம்  தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் இல்லையெனவும் அவர் கூறினார்.

இந்த நிலையிலேயே இந்த மக்கள் விசேட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .