2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் சுற்றிவளைப்பு

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றை நேற்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த ஹோட்டலில் இராணுவத்திலிருந்து வெளியேறிய 400 பேர் ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும்  குறித்த  ஹோட்டலில் இருப்பதாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பவர்களே குறித்த ஹோட்டலில் தங்கியிருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி.சில்வா குறிப்பிட்டார்.  இராணுவத்திலிருந்து வெளியோர் எவரும் அங்கிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .