2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஐனாதிபதி தேர்தல்: ஐ.நா திருப்தி

Super User   / 2010 ஜனவரி 28 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் அற்றதாக
முடிவடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
நாயகம் பான்கீமூன் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்,
ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக நாட்டில் அரசியல் கட்சிகள் செயல்படவேண்டும் எனவும் பான்கீமூன் குறிப்பிட்டார். எந்தவித பிரச்சினைகளையும் சமாதானமான முறையில் தீர்க்கவேண்டும் எனவும் பான்கீமூன் வலியுறுத்தினார்.

தேர்தல் கடுமையானதொரு போட்டியாக இருந்திருக்கிறதென்று தான் கருதியதாகவும் பான்கீமூன் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்த பின்னர், இடம்பெற்ற முதலாவது தேர்தல் இதுவெனவும் பான்கீமூன் சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .