2021 ஜூன் 17, வியாழக்கிழமை

லேக் ஹவுஸ் -ரூபவாஹினி ஊழியர்கள் மீது விசாரணை

Super User   / 2010 பெப்ரவரி 01 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசசார்பு இலத்திரனியல், அச்சு ஊடகவியலாளர்கள்  அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் உட்பட இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் பணியாளர்கள் பலர் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தமது செய்தியறிக்கையில் தெரிவித்தது.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த  ஜெனரல் சரத் பொன்சேகாவின்  செயற்பாட்டிற்கு ஊடகவியலாளர்கள் பலர்  பங்களிப்பு வழங்கியதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது.

எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின்  8 பணியாளர்கள் மீது ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்கள் உட்பட இன்னும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .