2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழரின் வாக்கெடுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 03 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களினால் தமிழீழக் கொள்கையை அங்கீகரிப்பது தொடர்பில்  கடந்த வாரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க பாதுகாப்புப் பேச்சாளர், அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல இந்த  மறுப்பை வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு நாட்டினாலோ அல்லது சமூகத்தினாலோ நடத்தப்படும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக் குறித்து இலங்கைக்கு கவலை கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதுடன், மக்களால் வேண்டப்படும் சகல தேர்தல் முறைமைகளையும் , அரசியல் தீர்வுகளையும் தாம் பின்பற்றுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 தமிழீழக் கொள்கையை அங்கீகரிப்பது தொடர்பில் பிரிட்டனிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் வார இறுதியில்   வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.  தமிழீழக் கொள்கையை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக 64,000 புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .