2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யோஷித ராஜபக்ஸவின் இராஜினமாவுக்கு எதிர்க்கட்சி கோரிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 05 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் ஈடுபட்ட 14 இராணுவத்தினருக்கு அரசாங்கம் கட்டாய ஓய்வு வழங்கினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸவும் இராஜினமாச் செய்யவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

யோஷித ராஜபக்ஸ அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டதற்கான வீடியோ, புகைப்படம் போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், இதனால் யோஷித ராஜபக்ஸ முதலில் இராஜினமாச் செய்யவேண்டும் எனவும்   அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .