2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய நாடுகள் தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்தம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைக் கவனத்திற்கொண்டே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை  இடைநிறுத்தப்பட்டமை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படவிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை இலங்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறினார்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .