2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு 300 மில்லியன் அமெ.டொலர்; ரஷ்யா கடன் உதவி

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக ரஷ்யா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஜயத்தின்போது, இது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில், இதற்கான ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் ரஷ்யாவின் பிரதி நிதி அமைச்சர் டிமித்திரி பான்கின் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவை நாளை திஙகட்கிழமை மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நேற்று ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .