2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகா கைதுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஆழ்ந்த கவலை

Super User   / 2010 பெப்ரவரி 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச சமூகம் தனது ஆழ்ந்த கவலையை  செலுத்தியுள்ளது.

யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இலங்கையின் நிலைமைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.

இங்குள்ள நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படவேண்டும் எனவும்  இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் குரோவ்லி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சமூகத்தில் பிளவுகள் ஏற்படாதவாறு செயற்படவேண்டும் எனக் கூறிய அவர், இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் இச் சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவின் கைது தேவையற்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இரு தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் சபையும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் நீண்டகால சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைதியான  சூழ்நிலை பேணப்படவேண்டியது அவசியம் எனவும் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது,  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன், குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவின் கைதானது எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நடவடிக்கை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .