2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அரசுடன் பேச்சு நடத்த ஐ.நா பிரதி செயலாளர் இலங்கை வருகை

Super User   / 2010 பெப்ரவரி 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் பி.லியின் பெஸ்கோ இந்த மாதக் கடைசியில் இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்று இரவு தொலைபேசி மூலம் பேசுகையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தை தொடர்ந்ததாக இச் சந்திப்பு இடம்பெறுகிறது.

இலங்கையின் அண்மைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தை வெளிப்படுத்தியிருக்கும் பான்கீமூன், கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வழக்குத் தொடர்பில் சட்டத்தை மதித்துச் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும், இலங்கையும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், வடபகுதித் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இணைந்து செயற்படுமாறும் பான்கீமூன் வலியுறுத்தியுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .