2021 ஜூன் 16, புதன்கிழமை

அமெ. - நோர்வே நாடுகளின் நிராகரிப்பை வெளிநாட்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டார்

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் நிராகரித்ததை தாம் ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவளித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அந்த நாட்டின் தூதுவராலயங்கள்  மறுப்புத் தெரிவித்திருந்தன.

ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் நோர்வே ஒருபோதும் தலையிடமாட்டாது என நோர்வே தூதுவராலயம் விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பண உதவியளித்ததாக தெரிவி்க்கப்படும் இலங்கை  அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும்  இல்லை என அமெரிக்கா தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.

 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .